அரசியல்உள்நாடு

சம்மாந்துறை சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் கட்சி – தவிசாளராக மாஹீர் தெரிவு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.எல்.எம். மஹீரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நளீம் அவர்களும் போட்டியிட்ட நிலையில்,
14 வாக்குகளை பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர் தவிசாளராக தெரிவாகியதுடன், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நளீமுக்கு ஆதரவாக 07 வாக்குகள் கிடைக்க்பெற்றது.

இதன் போது, உப தவிசாளராக உப வினோகாந் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

புதிய பிறப்புச் சான்றிதழ்களில் விசேட மாற்றங்கள் 

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு