உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக பிரபாசங்கர் நியமனம்!

பாறுக் ஷிஹான்

சுகாதார அமைச்சின் செயலாளரினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட டொக்டர் டீ.பிரபாசங்கர் இன்று (6) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அறிக்கை செய்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த டொக்டர் பிரபாசங்கர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளதுடன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியாகவும் காத்தான்குடி கொரோனா வைத்தியசாலை பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பல நுகர்வுப் பொருட்களின் விற்பனை மற்றும் சேமிப்பு குறித்து விசேட வர்த்தமானி

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

மாவீரர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.