உள்நாடு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உலக உளநல தினத்தை முன்னிட்டு நடைபவனி!

(UTV | கொழும்பு) –

உலக உள நல தினம் இன்றாகும்.மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் உளநல தினம் அனுசரிக்கப்படுகிறது.உலக உளநல தினம் முதன் முறையாக அக்டோபர் 10,1992 அனுசரிக்கப்பட்டது.

உலக உள நல தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவினரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனீபா தலைமையில் “உளநலம் என்பது அனைவரினதும் மனித உரிமையாகும்”எனும் தொனிப்பொருளில் நடைபவனி மற்றும் கருத்தரங்கு நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம் ஹனீபா ,சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்,திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.ஆர் நியாஸ்,உளநல பொறுப்பு வைத்திய அதிகாரி கசுன் கடுவல மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்