அரசியல்உள்நாடு

சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணம் இடைநிறுத்தம் – பிரதேச சபைத் தவிசாளர் திடீர் விஜயம்!

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணத்தை இடைநிறுத்துமாறு கோரி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று (22) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்ததன் பின்னர் சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணிப்பு இடம் பெறும் இடத்தினையும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

வீதி பரப்பளவு, போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் பயன்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அத்துடன் குறித்த சுற்று வட்ட நிர்மாணிப்பை இடைநிறுத்துமாறு கோரி இதுவரை இருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

editor

நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor