உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்தோடு ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் இன்று (16) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், காரைதீவு 06 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், பெண் சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில், அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் கட்டளையின் பிரகாரம், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான, சார்ஜன்களான மக்பூல், ரணசிங்க, பண்டார, பூஸ்பகுமார, பொலிஸ் உத்தியோகத்தர்களான ருமேந்திர, சுனில், பொலிஸ் வாகன சாரதிகளான ஆசிரி, சத்தேன, பெண் பொலிஸ் உத்தியோகத்தரான ஊதாரி உள்ளிட்ட குழுவினர் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றினால் இரத்து