அரசியல்உள்நாடு

சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிரடி அறிவிப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில், இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பத் மனம்பேரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பத் மனம்பெரிக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50,000 கிலோ மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சம்பத் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகை!

22 கோடி ரூபாய் அபராதம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை