உள்நாடு

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் எதுவுவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக மாநாட்டின் போது பேசிய இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கம்மன்பில, இந்த விவகாரம் தொடர்பான நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது எந்த விவாதமும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

உலக சந்தையில் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் விலை திருத்தத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் கமன்பில மேலும் குறிப்பிட்டார்.

Related posts

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

editor

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்