கேளிக்கை

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினம்

(UTV|INDIA)-திருமணத்திற்குப் பின் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்தாலும் முதன்முறையாக தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கிறார். சிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து நாக சைதன்யா சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.

“இருவரும் இணைந்து பணியாற்றுவதால் ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் காலையில் எனக்கு முன்பாகவே சமந்தா சென்றுவிடுவார். அதிக நேரங்களை நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் செலவிடுகிறோம்.
இந்த படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாகச் சண்டை போட்டுக்கொள்வதாகக் காட்சிகள் உள்ளன. ஆனால் உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. இதனால் அந்த காட்சிகளில் நடிப்பது சற்று கடினமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Related posts

மலையாள படத்தில் இணையும் ஜாக்கிசான்

“மதத்தை என்னில் திணிக்க வேண்டாம்”

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!