உள்நாடு

சப்ரகமுவ மாகாண பராமரிப்பு நிலையங்களுக்கு உத்தியோகத்தர்கள் நியமனம்!

சப்ரகமுவ மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு நிலையங்களுக்கு
விடுதித் தாய் மற்றும் மேற்பார்வையாளர் பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்படி நியமனங்களைப் பெற்றவர்கள் சப்ரகமுவ மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் புஷ்பகுமார திசாநாயக்க,
சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் பிரதீபிகா டி. இலுக்கும்புர, சப்ரகமுவ மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.சி.எல். ரத்நாயக்க, மாகாண சமூக சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கசுன் ஹபரகடை, உதவி நன்னடத்தை ஆணையாளர் யூ.ஐ.டி. சேனாரத்ன, நிர்வாக உத்தியோகத்தர் இனோகா பரபிட்டிய உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை – முன்னாள் எம்.பி. வினோ அறிவிப்பு

editor

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்

துறைமுக ஊழியர்கள் போராட்டத்திற்கு