வணிகம்

சந்தைக்கு அறிமுகமாகும் பனை ஐஸ்கிரீம்

(UTV|கொழும்பு) – பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை தொழில் துறையில் ஈடுபட்டிருந்தோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

தற்போது அரசாங்கம் இந்த தொழில் துறை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் பிரபல்யப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் கீழ் பனை அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது

Related posts

புகையூட்டிய கருவாடு உற்பத்தியில் புத்தாக்கத்தினூடாக வாழ்க்கை மேம்பாடு

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி

சதொச வர்த்தக நிலையங்களை திறந்து வைக்கவும்