உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான முறையில் 23 வயதுடைய யுவதி உயிரிழப்பு!

நுவரெலியாவில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு தொடர்ந்தும் பின்பற்றவும்

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு

ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம்!