வகைப்படுத்தப்படாத

சந்திரயான் 2 – தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு

(UTVNEWS | COLOMBO) – சந்திரயான் – 2 விண்கலத்தில் இருந்து செலுத்தப்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ‘விக்ரம் லேண்டர்’ இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் – 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று(07) அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.

400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது. ஆனாலும், லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

National Security Advisory Board appointed

30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தேர்தலில் விருப்பமில்லை-தேர்தல் ஆணைகுழு

ஊழல் மோசடி ஒழிப்பு விடயம் தெர்பான நாடாளுமன்ற விவாதம்