உள்நாடு

சதொச ஊடாக ஒருவருக்கு 3 தேங்காய் கொள்வனவு செய்ய முடியும்

சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி இன்று (05) சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு 3 தேங்காய் மற்றும் 5 கிலோ அரிசியை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளிலும், நாளை (06) முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள சதொச கிளைகளிலும் தேங்காய் மற்றும் அரிசியை கொள்வனவு செய்ய முடியும்.

“தற்போது கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளுக்கு தேங்காய் அனுப்பப்படுகிறது.

மாலையில் கொழும்பில் உள்ள கிளைகளுக்கும் வழங்கப்படும். பிற்பகல் வேளையில் நாட்டு அரிசி கிளைக்களுக்கு கிடைக்கப்பெறும்.” என்றார்.

Related posts

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

வடக்கில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுக்குள்வரும் – புதிதாகப் பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு