உள்நாடு

சட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் 200 சட்டவிரோத துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய 2020.02.05 திகதி முதல் 2020.02.12 திகதி வரையில் நாடாளவிய ரீதியில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் போரா 12 துப்பாக்கிகள் 137, போரா 16 துப்பாக்கிகள் 15 மற்றும் வேறு வகையான துப்பாக்கிகள் அரசாங்கத்திடம் ஒப்படக்கப்பட்டுள்ளது.

அதிகளவான துப்பாக்கிகள் மேல் மாகாணத்தில் இருந்தே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு

தெஹியத்தகண்டிய பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்களுக்கு பலத்த சேதம், இருவர் காயம்!