உள்நாடு

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக போராட்டம்

(UTVNEWS | ‎NUWARA ELIYA ) –சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கொட்டகலை நகரில் இன்று முற்பகல் கண்டனப் பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.

குறித்த போராட்டத்தில் வைத்து சட்டவிரோதமான மது விற்பனை நிலையங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுவரி திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பொலிஸார் உட்பட பல தரப்புகளுககு மகஜர் கையளிக்கப்பட்டது.

கடந்த 23 ஆம் திகதி தந்தை தினமும் குடித்துவிட்டு சண்டைபிடிப்பதால் மனம் உடைந்து கொட்டகலை மேபீல்ட் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இப்படியான சம்பவம் இனியும் பெருந்தோட்டப்பகுதிகளில் நடைபெறக்கூடாது என்றும், இதனால் சட்டவிரோதமான முறையில் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களை சுற்றிவளைத்து முடக்குவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டம் மலையக இளைஞர்களினால் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

இன்றும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

அநுர அலை இன்னும் குறையவில்லை – அதனை குறைத்து மதிப்பிட முடியாது – கொழும்பில் போட்டியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

editor