உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை -19 வயது கர்ப்பிணிப் பெண் கைது

சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, சந்தேக நபர் தனது கணவருடன் இணைந்து மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்துக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 96 போத்தல்கள் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட கசிப்புத் தொகையையும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor

மட்டக்களப்பு, உன்னிச்சையில் யானைகளின் அச்சுறுத்தல் – பெண்னொருவர் கவலைக்கிடம்!

editor