உள்நாடு

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

(UTV|COLOMBO) – 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றுவது 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரான, மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கை மூலம், நாட்டின் வருமானத்திற்கு 599 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதுடன், அவற்றுள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 59 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனூடாக 375 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

வீட்டு மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

editor

அறுகம்பை பகுதியில் சோதனை நடவடிக்கை

editor