சூடான செய்திகள் 1

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTVNEWS|COLOMBO) – சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் நாளை முதல் 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைத்து பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தொிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் கைவசம் வைத்திருப்பது தொடா்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் தொிவித்துள்ளாா்.

Related posts

தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கை

பியல் நிஷாந்தவிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்