வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 165,200 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுத் தகவல்களுக்கமைய, இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 16.52 மில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளுக்காக சிகரெட்டுகளும், சந்தேக நபரும் வெள்ளம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
