உள்நாடு

சட்டமா அதிபருக்கு நீதிமன்றினால் கட்டளை

(UTV | கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு அரச சபை கட்டிடத்தினை பாதுகாக்கவும் அதற்குள் பிரவேசிக்க தடை விதிக்கும் கட்டளை ஒன்றை குருணாகலை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபர் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த தகவலை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிவுப்படுத்துமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

IMF குறித்து அனுரவின் நிலைப்பாடு

editor

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது

உயர்மட்ட சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி பேச்சு!