உள்நாடு

சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், CID இடம் அறிக்கை கோரல்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையற்ற விசாரணைகள் குறித்த, சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில், 42 சந்தேகநபர்கள் குறித்த ஆதாரங்களை எழுத்துமூலம் உறுதிப்படுத்துமாறும், ஐவர் தொடர்பான விசாரணைகள் முழுமையடையாதுள்ளதாகவும் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபர் நேற்று (15) அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அந்த அறிக்கை, இன்று மாலை அல்லது நாளை தமக்கு கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி மாளிகை தேவையில்லை – சஜித் பிரேமதாச

editor

Update – உழவு இயந்திர விபத்து – இதுவரை 08 சடலங்கள் மீட்பு

editor

1600 ஆக அதிகரித்த பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

editor