உள்நாடு

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

சட்டத்தரணி ஒருவர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, மீண்டும் வீடு நோக்கி செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது காரை செலுத்த முன்றுள்ளார்.

இதன்போது சிறைச்சாலை பஸ் ஒன்று நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், பஸ்ஸை நிறுத்துவதற்காக காரை அங்கிருந்து எடுக்குமாறு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சட்டத்தரணியிடம் கூறியுள்ளார்.

இதனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் சட்டத்தரணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

editor

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இன்று நள்ளிரவுடன் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு

editor