விளையாட்டு

சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை

(UTV | கொழும்பு) –  பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 98ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.56 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

இதன் மூலம் 2018ஆம் ஆண்டு சுகததாச விளையாட்ரங்கில் யாழ். வீராங்கனை அனித்தா ஜெகதீஸ்வரன் நிலைநாட்டிய 3.55 மீற்றர் என்ற தேசிய சாதனையை சச்சினி முறியடித்தார்.

Related posts

பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு

குசல் மற்றும் நிரோஷனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இங்கிலாந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியனை தனதாக்கியது