உள்நாடுவணிகம்

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக பொருளாதார அபிவிருத்தி, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் போது நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் மிகுந்த கவனம் செலுத்தப்படுமென அவர் மேலு குறிபிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ஷ இதனைக் குறிபிட்டுள்ளார்.

எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் சகல துறைகளையும் மேம்படுத்தி அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்தும் வகையில், வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

editor

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

நாடாளுமன்ற புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்