அரசியல்உள்நாடு

சகலரும் நினைப்பதைப் போல ராஜபக்‌ஷக்கள் செல்வந்தர்கள் இல்லை – ரோஹித ராஜபக்‌ஷ

“சகலரும் நினைப்பதைப்போல ராஜபக்‌ஷக்களின் குடும்பத்தினர் செல்வந்தர்கள் இல்லை, எங்களுக்கென்று எதுவும் இல்லாத நிலையிலே நாங்கள் வாழ்கிறோம்” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ராஜபக்‌ஷக்கள் செல்வந்தர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரோஹித ராஜபக்‌ஷ தெரிவித்ததாவது:

அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்‌ஷவினரின் குடும்பம் இல்லை. எங்களிடம் எல்லாம் இருப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில், எங்கள் குடும்பத்திடம் எதுவும் இல்லை. எங்களிடம் வீடு, காரென எவையும் இல்லை.

நாங்கள் சிறு வயதிலிருந்தே அரசாங்க சொத்தில் வசித்து வருகிறோம்.

நாங்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில், ஒரு நண்பரிடம் வாகனத்தை கேட்டு வாங்கிக் கொள்வோம்.

உண்மையாக அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்க்ஷக்களின் குடும்பம் இல்லை.

யாரிடமும் கையேந்தக் கூடாது. தாமே சம்பாதித்து வாழ வேண்டும் என்று என் தந்தை கூறுவார்.

நான் செய்த ஒரே வேலை கற்பித்தல். அதுவும் பணத்திற்காக அல்ல.

எனக்கு வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லை. நானும் ஒரு முனைவர் பட்டம் பெற வேண்டும். இதுவே எனது ஆசை என்றார்.

Related posts

இலங்கையில் நிலநடுக்கம்!

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

நாளைய அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து