உள்நாடு

கோட்டாவின் வெளியேற்றம் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் ட்விட்டர் பதிவு

(UTV | கொழும்பு) –  கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடனும், கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts

ஜூரியின் உலக அழகு ராணி மகுடம் கேட் ஷைண்டருக்கு

லொஹான் ரத்வத்தவுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்தது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

editor