உலகம்சூடான செய்திகள் 1

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

(UTV| ஸ்விட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 663,740 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 4 லட்சத்து 90 ஆயிரத்து 678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 25 ஆயிரத்து 207 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 142,183 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்

Related posts

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு

‘Batticaloa Campus’ தொடர்பில் கோப் குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்