உள்நாடு

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில், நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத கொவிட் நோயாளர்களை வீட்டில் வைத்து வைத்திய கண்காணிப்பு மேற்கொள்ள முன்னெடுத்த தீர்மானம் இன்று (09) முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  • 1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் நோயாளர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்
  • நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத 2 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட கொவிட் 19 நோயாளர்களை இவ்வாறு வீட்டில் வைத்து கண்காணிக்கப்படும்.
  • கடுமையான நோய் நிலைமை ஏற்படுமாயின் அவர்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
  • வீட்டிலேயே வைத்து கண்காணிப்பதற்கு நோயாளர்களது அனுமதி பெறப்பட வேண்டும்.

முன்னதாக இந்த நடைமுறை மேல் மாகாணத்தில் இருந்த நிலையில், இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயார்

editor

விசாரணைக்கு 4 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இரங்கல்

editor