கொழும்பு மாநகர சபையின் பட்ஜட் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர சபையின் கட்டுப்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது, மாநகர சபையின் முதல்வருக்கு பெரும் அதிகாரம் எதுவும் இருக்காதென்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஆளும் கட்சி தோல்வியடைந்துள்ளதால், சபையின் பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சியிடம் இருப்பதை இது உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மாநகர முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பாக அமையாமல், பகிரங்க வாக்கெடுப்பாக இடம் பெற்றிருந்தால்.
ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சிகள் மாநகர சபையைக் கைப்பற்றியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம், எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சியால் 03 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முஜுபூர் ரஹ்மான் எம்பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
