உள்நாடு

கொழும்பு, நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை தீயணைப்புத் துறை, சம்பவ இடத்துக்கு பல தீயணைப்பு வாகனங்களை அனுப்ப உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Related posts

முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

editor

13 இன் ஊடா தமிழீழத்தை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது – சரத் வீரசேகர.

லிட்ரோ விலை குறைகிறது