உள்நாடு

கொழும்பு துறைமுகநகர சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின.

அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’

கடதாசி நிறுவனம் ஒன்றில் பாரிய தீ [VIDEO]

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு