உள்நாடு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து – ஒருவர் பலி

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில், சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) நடந்த இவ்விபத்தில், பிரைம் மூவர் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெடிகமவைச் சேர்ந்த 36 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொள்கலனை இயக்கிய இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

தாமரை கோபுரத்தினை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்

நாளை நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு