சூடான செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் தற்போது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியொருவரை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் திடீரென அந்த பதவியில் இருந்து விலகியதால் குறித்த இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக பயணிகள் மற்றும் இறக்குமதி பிரிவுகளைத் தவிர ஏனைய அனைத்து பிரிவுகளின் பணியாளர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

காலநிலையில் மீண்டும் மாற்றம்