உள்நாடு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 124 பேர் கைது!-03 லட்சத்துக்கும் மேல் அபராதம்

(UTV | கொழும்பு) –   கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

✔நேற்று காலை 6.30 இலிருந்து இந்து காலை 10 மணி வரையான கலப்பகுதியில் இடம்பெற்ற பயணசீட்டு பரிசோதனையின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

✔இந்த பரிசோதனையை பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில்  நிலைய ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டதாக ரயில் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

✔ இவ்வாறு கைது செய்யப்பட்ட 78 பேர் அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து பெறப்பட்ட அபராதத் தொகை 02 லட்சத்து 38,770 ரூபாயாகும்.

✔ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

✔அதன்படி, பயணச்சீட்டு இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடம் இருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 லட்சத்து 78,610 ரூபாய் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

கல்முனை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை