உள்நாடு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

editor

2022 ஆம் ஆண்டில் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்!

வாகன இறக்குமதிக்கான சாத்தியப்பாடு தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்!