உள்நாடு

கொழும்பு – இராஜகிரியில் தீ விபத்து

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு அருகில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வரையும் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார் – மனித உரிமை ஆணைக்குழு

editor

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்