உள்நாடு

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் கொழும்பு 01 இல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor

7.5மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, விடுதலையானார் அலி சப்ரி!