உள்நாடு

கொழும்பில் வழுக்குக்கும் ‘டெல்டா’

(UTV | கொழும்பு) – அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள்.

இரண்டு பேர் தெமடகொடையிலும் இரண்டு பேர் வட கொழும்பிலும் உள்ளவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடனான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி நாட்டில் டெல்டா திரிபுடன் கூடிய 36 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

சஜித் வெற்றிபெற முடியாது – தபால் வாக்குப்பதிவு தொடங்கியது நற்செய்தி கிடைத்துள்ளது – ஜனாதிபதி ரணில்

editor

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை