அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மர்ஹூம். பாயிஸ் அவர்களின் அலுவலகத்தில் இன்று கட்சியின் மீள் கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல், கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்டி ஹபீப் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
கட்சியின் கொழும்பு மாவட்ட புணரமைப்பு உள்ளிட்ட கட்சியின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு தொடர்பிலும் இங்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கட்சியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் றிஸ்மி ஹனீபா, கட்சியின் முக்கியஸ்தர்களான ஹஸன், அலி சித்திக், முஸம்மில், அஷ்ரப் உள்ளிட்டோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், மர்ஹூம் பாயிஸ் அவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
