உள்நாடு

கொழும்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு, மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்திற்கு அருகில் இருந்து நேற்று வியாழக்கிழமை (29) காலை வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயது மதிக்கத்தக்க வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண் வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்திருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது

BREAKING NEWS – ஸூஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

editor

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

editor