உள்நாடு

கொழும்பில் இடம்பெற்ற ஹிஜ்ரி புதுவருட நிகழ்வு

இஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி 1447 நிகழ்வு நேற்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு 02 கொம்பனி வீதியில் உள்ள வேக்கந்த ஜூம் ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்து இந்நிகழ்வு, முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் முனீர் முலப்பர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பிரதான உரையை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்செய்க் அர்க்கம் மௌலவி நிகழ்த்தினார்.

வேகந்த பள்ளிவாசல் செயலாளர் மற்றும் பேஸ் இமாம் ஆகியோரினால் துஆப் பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

கொம்பனி வீதி அஹதியா பாடசாலை மாணவர்களது கஸீதா போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொம்பனி வீதி வேகந்த பள்ளிவாசல் பிரிவைச் சேர்ந்தவர்கள் (மஹல்லாவாசிகள்), பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-அஸ்ரப் ஏ சமத்.

Related posts

தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை சித்திரவதை செய்து கொலை – தம்பதியினருக்கு மரண தண்டனை

editor

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக மு.கா உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் கடமையேற்றார்.

editor