இந்தோனேசியா நாட்டின் 80 வது தேசிய சுதந்திர தினம் நேற்று முன்தினம் 27ஆம் திகதி கொழும்பு 7 ல் உள்ள இந்தோனேசியா துாதுவர் தேவி ருஷ்டினா அவர்களின் தலைமையில் அவரது அலுவலக இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு அமைச்சர் டொக்டர் உபாலி பல்லினகே கலந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களான விமல் ரத்னாயக்க, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முப்படை படைத்தளபதிகள், கடற்படை அதிகாரிகள், அத்துடன் இந்தோனேசிய கலாச்சார குழுக்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் அத்துடன் 80வது சுதந்திர தின கேக்கை இரு அதிதிகளும் இணைந்து வெட்டி பரிமாறிக் கொண்டனர் அத்துடன் இரு நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டது.
இரு அதிதிகளிலும் கடந்த 80 வருட கால இலங்கை -இந்தோனேசியா நட்புறவு வர்த்தக நடவடிக்கைகள் பற்றியும் உரையாற்றினார்கள்.
-அஷ்ரப் ஏ சமத்