வகைப்படுத்தப்படாத

கொழும்பில் அதிக மழை

(UDHAYAM, COLOMBO) – பருவ மழை காலநிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

90.2 மில்லி மீட்டர் அளவில் நேற்று பெய்த மழையால், கொழும்பு மாவட்டத்தில் 102 குடும்பங்களைச் சேர்ந்த 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொஹிலவத்தை பொது மயானத்திற்கு அருகில் களனி கங்கையின் ஒரு பகுதி சரிந்துள்ளதால் தொட்டலங்கவில் இருந்து அம்பதல சந்திவரையான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த பாதையில் வாகனத்தை செலுத்த வேண்டாம் என காவற்துறை கோரியுள்ளது.

Related posts

Two arrested with heroin

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கம்

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்