உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் சனிக்கிழமை  (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி  வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் கொலன்னாவ நகரசபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது

Related posts

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் டலஸ்

அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் சடலமாக மீட்பு!

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு