வகைப்படுத்தப்படாத

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

(UDHAYAM, COLOMBO) – அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடுகள் காரணமாக நாளை மறுநாள் 8 மணி நேர நீர் வெட்டு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை – கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி , இரவு 9 மணி தொடக்கம் 21ம் திகதி அதிகாலை 5 மணி வரை தெஹிவளை , கல்கிஸ்ஸ , ரத்மலான , சொய்சாபுர , அத்திடிய , கடுவான , பெபிலியான , பெல்லன்தொட , நெதிமால , கலுபோவில , நுகேகொடை , கொஹுவலை , போன்ற பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அதேபோல் , வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை உள்ளிட்ட தெற்கு கொழும்பு பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

තැපැල් සේවකයින් අද සාකච්ඡාවකට සුදානම්

அமெரிக்காவின் பாதீட்டிலும் சர்ச்சை

Anjalika bags women’s singles crown