உலகம்

கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட ஜோ பைடன்

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.

மேலும், அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன், “வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் வழங்குவதற்கு கையிருப்பில் இருக்கும்போது அதைப் போட்டுக் கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நானே அதை போட்டுக் கொண்டேன்,” என்று கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டொனால்டு ட்ரம்புக்கு மைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன?

Shafnee Ahamed

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

30 பேர் பயணித்த பேருந்து மண் சரிவில் சிக்கியது – 18 பேர் பலி – சோகத்தில் மூழ்கிய இந்தியா

editor