உலகம்

கொரோனா வைரஸ் – ஈரானில் 26 பேர் பலி

(UTV|கொழும்பு) – ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 141 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,807 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஈரான் நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related posts

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை

Service Crew Job Vacancy- 100

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு 5-வது இடம்