உலகம்

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் வெற்றி – Oxford பல்கலைக்கழகம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒக்ஸ்போர்ட் Oxford பல்கலைக்கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்துக்கு ´AZD1 222´ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா தடுப்பு மருந்து சுமார் 1,077 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Related posts

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தை தாண்டியது

கொரோனா வைரஸால் உலகளாவிய ரீதியில் 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்