உள்நாடு

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டில் உள்ள 15 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதில் 35 பேர் ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திலும்,16 பேர் குருநாகல் போதனா மருத்துவமனையிலும் 13 பேர் கம்பஹா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 பேர் தொடர்ந்தும் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

எதிர்வரும் செவ்வாயன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும்

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு