விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் எரெடிவைஸ் கால்பந்து தொடர் இரத்தாகும் சாத்தியம்

(UTV – நெதர்லாந்து ) – எரெடிவைஸ் (Eredivisie) கால்பந்து தொடரை தொடர்ந்து நடத்த தாம் விரும்பவில்லை என நெதர்லாந்து கால்பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாரிய அளவிலான ஒன்று கூடல்களுக்கான தடையை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது.

இதன் காரணமாக இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக நெதர்லாந்து கால்பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது.

எனினும், இறுதி முடிவை மேற்கொள்வதற்கு முன்னதாக ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக நெதர்லாந்து கால்பந்தாட்ட சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

20க்கு 20 போட்டியில் இலங்கை அணியில் நீக்கப்பட்டுள்ள வீரர்!

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்திய சுமேத ரணசிங்க

editor